ARTICLE AD BOX

விக்கி கவுசல் நடித்த ‘சாவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், குஜராத்தின் பரூச் நகரில் உள்ள RK Cinemas திரையரங்கில், ஒரு ரசிகர் மதுபோதையில் திரையரங்குக்குள் புகுந்து, தீயணைப்பு கருவியை கொண்டு பெரியளவில் திரையை கிழித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ஜயேஷ் வசாவா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி முன்னர், ஒருவர்தம் வீட்டிலிருந்து குதிரை மீது வந்தபடி திரையரங்குக்குள் நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. படம் வெளியானது முதல் பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, சாம்பாஜி மகாராஜ் லேஜிம் என்ற பாரம்பரிய மகாராஷ்டிரிய நடனத்தை ஆடியதாக காட்டப்பட்ட காட்சி கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியதால், அந்த காட்சியை தயாரிப்பாளர் நீக்கியுள்ளார்.
சாவா திரைப்படம் சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1681ல் அவரது பட்டாபிஷேகத்திலிருந்து தொடங்கி அவரது வீரத்தன்மையை படம் பேசுகிறது. அக்ஷயே கன்னா, ரஷ்மிகா மந்தன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.33.10 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ.145 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.