ARTICLE AD BOX
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் சாலையின் அடியில் பொருத்தப்பட்ட 50 கிலோ அளவிலான நவீன வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் வெடிக்க செய்து பெரும் ஆபத்தை தவிர்த்துள்ளனர்.
பிஜப்பூரின் பசகுடா - அவாப்பள்ளி சாலையிலுள்ள தரைப்பாலத்தின் அடியில் சுமார் 50 கிலோ எடைக்கொண்ட ஐ.ஈ.டி எனப்படும் நவீன வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பதை மத்திய ரிசர்வ் காவல் படையினர் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயற்சித்தனர். ஆனால், அது அந்த வெடி குண்டானது பாலத்தின் அடியில் மிகவும் ஆழத்தில் பொருத்தப்பட்டிருந்தது. அதை வெளியே எடுக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும் என்பதினால் , பாதுகாப்புப் படையினர் அந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.
இதையும் படிக்க: 34 ஆண்டுகளுக்கு முன் தப்பிய குற்றவாளி! இறுதிக்காலத்தை சிறையில் கழிக்க விருப்பம்!
இதனால், அந்த சாலையின் ஓர் பகுதி வெடித்து சிதறியது. ஆனால், இந்த நடவடிக்கையினால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடமானது நக்சல்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்றும் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை சுமார் 100 முதல் 200 மீட்டர் தூரத்தில் இருந்து ரிமோட் மூலமாக வெடிக்க செய்ய வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.