சாலையில் இதை மட்டும் பார்த்தால்.. அந்த பக்கமே போகாதீங்க.. உடனே காரை நிறுத்தி சோதனை பண்ணுங்க!

2 days ago
ARTICLE AD BOX

சாலையில் இதை மட்டும் பார்த்தால்.. அந்த பக்கமே போகாதீங்க.. உடனே காரை நிறுத்தி சோதனை பண்ணுங்க!

Automobiles
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் காட்பாடி அருகே நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டில் சாலையில் பயிர்களை காயவைக்கும் வழக்கம் உண்டு. அதாவது அறுப்பு அறுக்கப்பட்ட பின்.. பயிர்களை சாலை ஓரத்தில்.. சாலை மீது காய வைப்பார்கள். அதன்மீது வாகனங்கள் ஏறிச்சென்றால் பயிர்களை பிரிக்கவும் வசதியாக இருக்கும்.

Automobile

சிலர் வைக்கோல்களை கூட இப்படி காய வைப்பார்கள். சில ஊர்களில் சாலைகளில் முந்திரிகளை கூட காய வைப்பார்கள். அதேபோல் சில இடங்களில் சாலைகளில் நார்கள் அது தொடர்பான விவசாய பொருட்களை காய வைக்கும் வழக்கமும் உள்ளது.

டெல்டா பகுதிகளில் பயிர்கள் தாண்டி நெசவாளர்கள் சிலர்.. தங்களின் நெசவு நூல்களை கூட வண்ணம் அடித்த பின் காய வைக்கும் வழக்கம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் காட்பாடி அருகே நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அதன்படி காட்பாடி அருகே சாலையில் காய வைக்கப்பட்ட புற்களால், தீப்பிடித்து முழுவதும் சேதமான கார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் நூலிழையில் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர். காய்ந்த புல் காரின் அடியில் சிக்கியதால், சாலையில் உரசிக்கொண்டே வரும் போது தீப்பிடித்து, காரில் தீ பரவியுள்ளது. இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீவனத்திற்கு போடப்படும் அல்லது வேறு சில மதிப்பு கூட்டு பொருட்களை விற்க காய்ந்த புல் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக புற்களை மக்கள் சிலர் சாலைகளில் காய வைப்பார்கள். ஆனால் அதுவே தற்போது விபத்துக்கு காரணமாக மாறி விடுகிறது. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.

பழைய கார்கள்:

சில காலங்களுக்கு முன் விற்கப்பட்ட பி4, பி5 வாகனங்கள் பொதுவாக அதிக சூடு ஆகும் வழக்கம் கொண்டது. அதேபோல் இந்திய பட்ஜெட் கார்களில் அந்த அளவிற்கு கிரவுண்டு கிளியரன்ஸ் இருப்பது இல்லை. இந்த நிலையில்தான் சாலைகளில் இது போல வைக்கப்படும் காய்ந்த புற்கள் அது வாகனங்களில் சிக்கி.. அப்படி சூடாகும் வாய்ப்புகள் உள்ளன.

இது போன்ற புற்கள் சாலைகளில் இருந்து எளிதாக வாகனங்களில் சிக்கிக்கொள்ளும். இந்த புற்கள் வாகனங்களில் சிக்கி பின் சூடு காரணமாக அது தீ பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி புற்கள் தீ பிடித்தால் உடனே அதனால் கார்கள் தீ பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதே சம்பவம்தான் காட்பாடியில் நடந்து உள்ளது. காட்பாடி அருகே சாலையில் காய வைக்கப்பட்ட புற்களால், தீப்பிடித்து முழுவதும் சேதமான கார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலைகளை தவிருங்கள்

இனிமேல் சாலைகளில் நெல் காய வைக்கப்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் புற்கள், வைக்கோல் காய வைக்கப்பட்டு இருந்தால் அந்த சாலைகளை தவிர்ப்பதே சரியாக இருக்கும். அந்த சாலைகளை தவிர்க்க முடியாத பட்சத்தில் உடனே சாலைகளை கடந்த உடன் வாகனத்திற்கு கீழ் சோதனை செய்ய வேண்டும். கீழே புற்கள், வைக்கோல் மாட்டி உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.

More From
Prev
Next
English summary
Avoid these kind of road at anycost if you are travelling in cars
Read Entire Article