ARTICLE AD BOX
சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது,
ரேகா குப்தாவின் அரசு பொதுப்பணித்துறையின் கீழுள்ள சாலைகளில் சட்டவிரோத கழிவுகள், குப்பைகள் தேங்குவதைப் பொறுத்துக்கொள்ளாது. சாலைகளில் இருக்கும் குப்பைகளை அகற்ற பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு இடங்களில் உள்ள அமைச்சர்களும் சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியின் நகராட்சி மன்றமும், மேயரும் இந்த சூழ்நிலையை உருவாக்கியதால், இந்தப் பிரச்னையை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. இதை நாங்கள் தொடர்வோம் என்று அவர் கூறினார்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை பொதுப்பணித்துறை மற்றும் நீர் வழங்கல் வாரிய அதிகாரிகளைச் சந்தித்து, பள்ளங்கள் மற்றும் நீர் வழங்கல் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி தடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளித்தோம். இந்தத் திட்டம் விரைவில் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
மேலும் பொதுப்பணித்துறை மற்றும் ஜல் போர்டு அதிகாரிகளைச் சந்திக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளைப் பராமரிப்பது எங்கள் பொறுப்பு என்று அவர் கூறினார்.