ARTICLE AD BOX
சாய் பல்லவி படத்துக்கு இந்த நிலமையா.. ரசிகர்களுக்கு மனசாட்சியே இல்லை!
சென்னை: கொரோனா காலகட்டத்திற்கு பின்பு பொதுமக்களில் சிலர் புதிதாக வெளியாகும் படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தியேட்டரில் கிடைக்கும் அதே அனுபவம் நல்லாதான் இருக்கும், ஆனால் வீட்டில் இருந்து ஓடிடியில் பார்ப்பது போன்ற சுகமே தனி என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். இன்றைய சூழலில் தியேட்டரில் வெளியான ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியாகும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. குறிப்பாக தியேட்டரில் ஹிட் ஆன படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். ஆனால், சாய் பல்லவி படத்திற்கா இப்படி ஒரு நிலமை என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
பிரேமம் படத்தின் மூலம் தமிழ் டீச்சராக வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. அதன் பிறகு மாரி 2, என்ஜிகே, கார்கி, அமரன், தியா போன்ற படங்களில் நடித்தார். அமரன் படத்தில் அவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றது. அமரன் படத்தை பார்த்து சாய் பல்லவியின் நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் எவரும் இல்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இந்தியில் ராமாயணம் கதையை மையமாக எடுக்கப்பட்ட வரும் திரைப்படத்தில் சீதாவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சிறந்த டான்சர்: நடிகை ஆவதற்கு முன்பு பிரபல டி.வி சேனல்களில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். நடனம் என்றால் சாய் பல்லவியை கையில் பிடிக்க முடியாது. மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. இதில், சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து பிரபுதேவா மாஸ்டரே அசந்து போனார். தெலுங்கில் இவர் நடித்த படங்களில் நானி, நாகசைதன்யா, வருண்தேஜ் ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடி கலக்கியிருப்பார். சாய் பல்லவியின் நடன அசைவுகள் ரசிகர்களை ஈர்த்தவிடுகிறது.
தண்டேல்: நாகசைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான தண்டேல் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை குவித்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. இப்படத்தின் வெற்றி விழாவின் போது நாகசைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா மிகவும் எமோஷனல் ஆக பேசியிருந்தார். சினிமா கரியரில் இந்த மாதிரி வெற்றி விழா கொண்டாடி ரொம்ப நாள் ஆகிவிட்டது. என் மகன் வெற்றி பெற்றது நான் வெற்றியடைந்ததை போல் உணர்கிறேன் என உணர்ச்சி பொங்க பேசியிருந்தார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சாய் பல்லவி தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகளும் வைரலானது.
காதல் கெமிஸ்ட்ரி: இப்படத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவிக்கான காதல் கெமிஸ்ட்ரி, நிஜ காதலர்களைப் பார்ப்பது போல உணர வைக்கிறது. ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிப்பால் ஈர்க்கிறார் சாய் பல்லவி. அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும் ரசிக்க வைத்துள்ளன. நடனக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
ஓடிடியில் அடி வாங்கிய தண்டேல்: தியேட்டரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தண்டேல் திரைப்படம் கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டரில் ஹிட் அடித்திருந்தாலும் ஓடிடியில் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தண்டேல் படத்தை பார்த்தவர்கள் சாய் பல்லவிக்கு இப்படி ஒரு நிலமையா என்றும் கேட்க தொடங்கியுள்ளனர். தெலுங்கு சினிமாக்காரர்களு பாகிஸ்தானை விட்டால் வேறு எதிரியே கிடையாது போல என்றும் ஏம்மா சாய் பல்லவியின் கதாப்பாத்திரத்தையும் கிண்டல் செய்து வருகின்றனர்.