ARTICLE AD BOX
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியின் அழுத்தம் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
கடைசியாக 2017இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு தற்போதுதான் இந்தத் தொடர் மீண்டும் நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபியில் முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துடன் நாளை (பிப்.20) விளையாடுகிறது. பிப்.23 ஆம் தேதி பாகிஸ்தானுடனும் மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்துடனும் விளையாடவிருக்கிறது.
பிஜிடி தொடரில் சரியாக விளையாடாத கோலி இங்கிலாந்து தொடரிலும் சுமாராகவே விளையாடினார். ஒருநாள் போட்டிகளில் 13,963 ரன்களை குவித்துள்ள கோலி இந்தத் தொடரில் அசத்துவாரா என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி குறித்து விராட் கோலி ஸ்டார் ஸ்பேர்ட்ஸில் கூறியதாவது:
நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தத் தொடர் நடைபெறுகிறது. எனக்கு எப்போது இந்த சாம்பியன்ஸ் டிராபி பிடிக்கும். டாப் 8 அணிகள் மட்டுமே தகுதி பெறுவதால் நாம் எப்போதும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடியாக வேண்டும். இந்த அளவிலான போட்டி எப்போதுமே நல்லது.
ஒருநாள் போட்டியின் வடிவம் டி20 உலகக் கோப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் 3, 4 போட்டிகள் லீக்கில் இருக்கின்றன. சரியாக தொடங்காவிட்டால், நீங்கள் அழுத்ததிற்குள் மாட்டிக்கொள்வீர்கள்.
முதல்போட்டியில் இருந்தே அழுத்தம் உண்டாகும். அதனால்தான் எனக்கு சாம்பியன்ஸ் டிராபி பிடிக்கும். முதல் போட்டியில் இருந்தே நீங்கள் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.