ARTICLE AD BOX
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிருக்கிறது. டாப் 8 அணிகள் மோதிய இந்த தொடரில் தற்போது இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.
இந்த போட்டி துபாயில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் ஏற்கனவே லீக் சுற்றில் மோதிய நிலையில், அதில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.
நியூசி. அணிக்கு பின்னடைவு:
இந்த சூழலில் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். இந்த சூழலில் நியூசிலாந்து அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணியில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பு லோகி பெகுர்சன் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகி இருந்தார்கள்.
எனினும் இருக்கும் வீரர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நியூசிலாந்து அணி பைனல் வரை வந்திருந்தது. இந்த தருணத்தில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பில்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி கேட்ச் பிடித்த போது கீழே விழுந்து அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்:
இதனால் வலியால் துடித்த மேட் ஹென்றி போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.இதை அடுத்து அவர் பந்து வீச வரவே இல்லை. மேட் ஹென்றி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த சூழலில் ஹென்றி இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்றால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதப்படும்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் கோச் அகிப் ஜாவேத் ஒரு கோமாளி.. எங்கள தூக்கிட்டு அங்க வர பிளான் பண்ணார் – ஜேசன் கில்லஸ்பி குற்றச்சாட்டு
இன்னும் இறுதிப் போட்டிக்கு மூன்று நாட்கள் இருப்பதால் அதற்குள் ஹென்றி முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் நியூசிலாந்து ரசிகர்கள் உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னர், ஹென்றிக்கு வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் விளையாடுவது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.
The post சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்தியாவுக்கு அடித்த லக்.. நியூசி. முக்கிய வீரருக்கு காயம் appeared first on SwagsportsTamil.