சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதால் பாக்.கிரிக்கெட் வாரியத்திற்கு இத்தனை கோடி நஷ்டம்..?

16 hours ago
ARTICLE AD BOX

கராச்சி,

அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தியதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாகிஸ்தான் வாரியம் தங்களது நாட்டில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 முக்கிய மைதானங்களை புதிதாக கட்டமைத்தது. அதற்காக அந்நாட்டு வாரியம் ரூ. 800 கோடிகளுக்கு மேல் செலவு செய்துள்ளது.

ஆனால் உள்ளூரில் பாகிஸ்தான் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடியது. இதனால் டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவை குறைந்து போயின. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சொற்ப வருமானமே கிடைத்தது. மேலும் தொடரை நடத்தியதற்காக ஐ.சி.சி. -யும் குறைவான தொகையே அளித்துள்ளது.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.869 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை ஈடுகட்ட வரும் காலங்களில் வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் போட்டி கட்டணத்தை குறைக்க பாகிஸ்தான் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article