சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

6 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நிறைவடைந்தன. குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

துபையில் நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும், நாளை மறுநாள் (மார்ச் 5) லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் விளையாடவுள்ளன.

இதையும் படிக்க: இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

ஆஸி. அணியில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக கூப்பர் கன்னோலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக மேத்யூ ஷார்ட் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். 21 வயதாகும் கூப்பர் கன்னோலி அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, கூப்பர் கன்னோலி ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார்.

ICC has approved Cooper Connolly's inclusion in the Australian squad after Matt Short was ruled out #ChampionsTrophy

More: https://t.co/IAGZXiAJCd pic.twitter.com/kaNvWAvkiN

— cricket.com.au (@cricketcomau) March 2, 2025

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்ற கூப்பர் கன்னோலி, தற்போது மேத்யூ ஷார்ட்டுக்குப் பதில் அணியில் இடம்பெற ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான கூப்பர் கன்னோலியை ஆஸ்திரேலிய அணி களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமனம்!

மாற்றம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி விவரம்

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஸாம்பா.

Read Entire Article