ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்
செய்தி முன்னோட்டம்
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெற்ற எதிர்பாராத தோல்வி குரூப் பி அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை முழுவதுமாக மாற்றியுள்ளது.
தற்போது, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளன.
இந்த மூன்று அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியா மார்ச் 10 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து மார்ச் 11 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதி இடத்தைப் பெற ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்.
இருப்பினும், இதில் தோற்றாலும், அடுத்து இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை கணிசமான வித்தியாசத்தில் தோற்கடித்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.
ஆப்கான் கிரிக்கெட் அணி
ஆப்கான் கிரிக்கெட் அணிக்கான வாய்ப்பு
ஆப்கான் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவை வென்றால் அரையிறுதியில் அவர்களின் இடத்தை எளிதாக உறுதி செய்துவிடலாம்.
அதே நேரம் அவர்கள் தோற்றால், நேரடியாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியா தங்கள் போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நேரடியாக தகுதி பெறும்.
இருப்பினும், ஆஸ்திரேலியா தோற்றால், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வெல்ல வேண்டும் அல்லது தோற்கும்பட்சததில் சிறந்த நெட் ரன் ரேட்டை பராமரிக்க வேண்டும்.
எதிர்பாராத சூழலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் தோற்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா தகுதி பெறும்.