சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

6 hours ago
ARTICLE AD BOX

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தி இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள இந்திய அணிக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்துக்கும் தமது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியில், ரோஹித்தும், சக வீரர்களும் சூழலுக்கு ஏற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசமாக்கியுள்ளனர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணி மீண்டும் ஒரு முறை சாம்பியனாகி உள்ளது என்றும் தனது பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Read Entire Article