ARTICLE AD BOX
Published : 27 Feb 2025 11:06 PM
Last Updated : 27 Feb 2025 11:06 PM
சாம்சங் கேலக்சி எம்16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாசங் கேலக்சி எம்16 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5000 mAh பேட்டரி
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைபி-சி போர்ட்
- 4ஜிபி / 6ஜிபி / 8ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.11,499 முதல் தொடங்குகிறது
- இந்த போனுடன் கேலக்சி M06 5ஜி போனும் சந்தையில் அறிமுகமாகி உள்ளது
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை