ARTICLE AD BOX
சாப்பிடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.சாப்பிடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் உமிழ்நீர் நன்றாக சுரக்க இனிப்பு அல்லது ஒரு பழத்தை சாப்பிடவும் .எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது.
சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம். பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும். இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள அதன் பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.
சாப்பிட வேண்டிய நேரம்:காலை 7 to 9 மணிக்குள் ,மதியம் 1 to 3 மணிக்குள்இரவு 7 to 9 மணிக்குள்
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கவேண்டும்.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.