ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையின் கேள்வி நேரத்தில், பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள சேதம் ஏற்பட்டதாகவும், தென்பெண்ணை ஆற்றல் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா..? என்றும் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெஞ்சில் புயலால் சாத்தனூர் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தடுக்கக்கூடிய வகையிலும், மீண்டும் வெள்ளம் வராமல் தடுக்கவும் சிறப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக கூறினார். மேலும், தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.