சாணாரப்பட்டி: மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

5 hours ago
ARTICLE AD BOX

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சாணாரப்பட்டியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 5 ஆடுகள் பலியாகின.

மேட்டூர் நங்கவள்ளி அருகே சாணார்பட்டி கிராம் கூலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழணியாண்டி (65). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேச்சலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ஆடுகளை புதன்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். வியாழக்கிழமை காலை வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து பட்டியில் இருந்த ஐந்து செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன.

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

மர்ம விலங்கு கடித்தில் ஆடுகள் பலத்த காயமடைந்தும், இறந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக மர்ம விலங்கு ஆடுகளை வேட்டையாடி வருவதால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், இறந்து போன ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த பகுதியில் திரியும் மர்ம விலங்கினை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கும் விட வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article