ARTICLE AD BOX
Rishabh Pant mocks Sakshi dhoni speech: ரிஷப் பந்தின் சகோதரி சாக்ஷியின் திருமணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கும் மனைவி சாக்ஷிக்கும் இடையே நடந்த ஒரு வேடிக்கையான உரையாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல தற்போதைய மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட விழாவில் இருந்து நிறைய வீடியோக்கள் வெளிவந்துள்ளன.
அதில் ஒரு வீடியோவில், தோனி தங்கள் உறவில் தன்னை விட அதிர்ஷ்டசாலி என்று தான் நம்புவதாக சாக்ஷி கூறினார். அப்போது குழுவில் நின்றிருந்த பந்த், "எல்லாப் பெண்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்" என்று நகைச்சுவையாக கூறினார். இதைக்கேட்டதும் தோனி உள்பட அங்கு இருந்த அனைவரும் பலமாக சிரித்தனர்.
ரிஷப் பண்ட் தங்கை சாக்ஷி பண்ட்டுக்கும், லண்டனை சேர்ந்த பிசினஸ்மேன் அங்கித் சவுத்ரிக்கும் முசோரியில ITC ஹோட்டலில் நடந்தது. இதில் ரிஷப் பண்ட்டின் உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண் விழாவில் எம்.எஸ்.தோனி மற்றும் அவரோட மனைவி சாக்ஷி, நிதிஷ் ராணா, கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஐபிஎல்லில் களமிறங்கும் 13 வயது பாலகன்! ரூ.1.10 கோடி ஊதியம்! யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
தோனி, சுரேஷ் ரெய்னா, ரிஷப் பன்ட் உடன் சேர்ந்து ஆட்டம் போட்டார். மேலும் பாடகர் ஸ்டெபின் பென் உடன் சேர்ந்து தோனி பாட்டு பாடிய வீடியோக்களும் வைரலானது.
Sakshi :- Mahi is more lucky than me
Rishabh :- Sabhi ladkio ko yahi lagata hai. 🤣🤣🤣
pic.twitter.com/IV4t3v5ab0
தோனி ரிஷப் பண்ட் நட்பு
தோனியும் ரிஷப் பண்ட்டும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தோனி ரிட்டையர் ஆன பிறகும் இவருவரின் நட்பு தொடர்கிறது. 2024 ஜனவரியில் லண்டனில் நடந்த பண்ட் தங்கை நிச்சயதார்த்த விழாவிலும் தோனியும் சாக்ஷியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மேலும் லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
சென்னைக்கு வந்த தோனி
ஐபிஎல் 2025க்காக எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் கேம்பில் மீண்டும் இணைந்து விட்டார். ரிஷப் பண்ட் தங்கை கல்யாணத்துக்காக ஐபிஎல் பயிற்சி முகாமில் இருந்து வந்த தோனி டெல்லியில் இருந்து டேராடூன் வந்து அன்கு இருந்து முசோரி சென்று சாக்ஷி பண்ட் திருமணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவாரா? மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்போது இணைவார்?