ARTICLE AD BOX

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி."
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர்நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
Revealing Tomorrow 11 AM!❤️🔥 #Coolie@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/G9BqJcbobF
— Sun Pictures (@sunpictures) February 26, 2025
இந்நிலையில், 'கூலி' படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. கூலி படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகின. ஆதலால் அந்த பாடல் தொடர்பான அப்டேட் தான் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.