சல்மான் கான் நடித்த 'சிக்கந்தர்' பட டீசர் வெளியானது

3 hours ago
ARTICLE AD BOX

சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவர் சமீபத்தில் பேபி ஜான் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

Sikandar aa raha hai, this Eid! 🌙

Here’s presenting the Film Teaser of Sikandar! 🔥 https://t.co/eyZdJ0FGqx #SajidNadiadwala’s #Sikandar @BeingSalmanKhan @iamRashmika #Sathyaraj @TheSharmanJoshi @MsKajalAggarwal @prateikbabbar #AnjiniDhawan @jatinsarna #AyanKhan

— A.R.Murugadoss (@ARMurugadoss) February 27, 2025


இந்த படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே இப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Read Entire Article