சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!

4 hours ago
ARTICLE AD BOX

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ராய்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்ந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்

மே.இ.தீவுகள் மாஸ்டர்ஸ் - 179/5

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தினேஷ் ராம்தின் அதிரடியாக 22 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் பிரையன் லாரா 41 ரன்களும், வால்டன் 31 ரன்களும் எடுத்தனர். பெர்க்கின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ் மற்றும் குணரத்னே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை மாஸ்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.

இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (மார்ச் 16) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article