சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்காவில் தடை விதிப்பு; டொனால்ட் டிரம்ப் அதிரடி

2 hours ago
ARTICLE AD BOX
சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்காவில் தடை

சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்தார் டொனால்ட் டிரம்ப் 

எழுதியவர் Sekar Chinnappan
Feb 07, 2025
11:54 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மீது தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, காசாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற செயல்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை ஐசிசி குறிவைத்ததாக இந்த உத்தரவு குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஆகிய இரண்டும் ஐசிசியில் உறுப்பினராக இல்லை, இரு அரசாங்கங்களும் வரலாற்று ரீதியாக அதன் அதிகாரத்தை எதிர்த்தன.

டிரம்பின் உத்தரவு ஐசிசி அதிகாரிகள் மீது உறுதியான மற்றும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விளைவுகள்

தடையினால் ஏற்படும் விளைவுகள்

இந்த தடை உத்தரவால் சொத்துகளைத் தடுப்பது, சொத்துக்களை முடக்குவது மற்றும் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது போன்ற விளைவுகளை சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனினும், இந்த நடவடிக்கையானது மனித உரிமை அமைப்புகளிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது, அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) இதை பொறுப்புணர்வு மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று வர்ணித்தது.

டிரம்ப் முன்பு 2020 இல் ஐசிசியின் முன்னாள் தலைமை வழக்கறிஞரை தடை செய்தார்.

எனினும், பின்னர் இந்த நடவடிக்கை ஜனாதிபதி ஜோ பைடனால் மாற்றப்பட்டது.

சர்வதேச நீதிமன்றத்தின் நிறுவனர் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அதனுடன் அமெரிக்கா பல விஷயங்கள் முரண்பட்டு வந்துள்ளது.

மேலும், ஜார்ஜ் டபிள்யூ. புஷ் காலத்தில் அமைப்பிலிருந்தே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article