சர்க்கரை இல்லாத காபி காலையில குடிச்சி தான் பாருங்களே; 'இந்த' நன்மைகள் கிடைக்கும்!

2 hours ago
ARTICLE AD BOX

Sugarless Coffee Benefits : காலையில் சர்க்கரை இல்லாத காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

சர்க்கரை இல்லாத காபி காலையில குடிச்சி தான் பாருங்களே; 'இந்த' நன்மைகள் கிடைக்கும்!

உலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது நாளை ஒரு கப் காபியுடன் தான் தொடங்குவார்கள். காலையில் குடிக்கும் ஒரு கப் காபி அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக நம்புகிறார்கள். இதனால் தான் காபி குடிக்காமல் தங்களது நாளை அவர்கள் தொடங்குவதில்லை. ஆனால், அதில் சர்க்கரை சேர்க்கும் போது அதன் பலன் ஓரளவு குறையும் தெரியுமா? மேலும் காலை குடிக்கும் காபி சர்க்கரை இல்லாமல் எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசிக்கிறீர்களா? நம்மில் பலருக்கு காபியில் இனிப்பு சேர்ப்பது தினசரி பழக்கமாகிவிட்டது. ஆனால் சர்க்கரை இல்லாத காபிக்கு நீங்கள் மாறுவதை கருத்தில் கொண்டால் இந்த மாற்றம் உங்களது ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை பயக்கும். சர்க்கரை இல்லாத காபி குடிப்பது சுவையில் தனித்துவமான அனுபவத்தை தருவது மட்டுமின்றி, பல வழிகளில் உங்களது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையில் இருக்கும். எனவே இப்போது சர்க்கரை இல்லாமல் தினமும் காலை காபி குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும்:

சர்க்கரை கலந்த காபியை குடிக்கும் போது உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து உடல் எடை கூடும். ஆனால் சர்க்கரை இல்லாத காபி குறைந்த கலோரி பானம் என்பதால், அதை காலையில் குடிப்பதன் மூலம் உடலில் தேவையில்லாத கலோரிகள் குறைந்து எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:

சர்க்கரையானது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அதன் அதிகப்படியான நுகர்வு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். அதுவே,சர்க்கரை இல்லாமல் காபி குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

அதிகளவு சர்க்கரை எடுத்துக்கொள்வது இதய நோயை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை இல்லாமல் காபி குடித்து வந்தால் அது இதய நோய் அபாயத்தை குறைக்கும். இது தவிர காபியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்:

காபியில் இருக்கும் காஃபின் வளர்ச்சிதை மாற்றத்தை துரித்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக சர்க்கரை இல்லாத காபி குடித்து வந்தால் அது இன்னும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், சர்க்கரையானது வளர்சிதை மாற்ற செயல்முறையை மெதுவாக்கும். அதுவே நீங்கள் சர்க்கரை இல்லாத காபி குடித்து வந்தால், உங்களது உடலின் ஆற்றல் உற்பத்தி செயல்முறையானது அதிகரிக்கும். மேலும் கொழுப்பு எரிக்கப்படும். 

இதையும் படிங்க:  பி.பி அதிகமா இருந்தால் 'காபி' அதிகம் குடிக்காதீங்க! ஆய்வு சொல்வது இதுதான்!

காபி மூளையின் செயல்பாட்டை மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துகிறது என்பதால், சர்க்கரை இல்லாத காபியை குடித்து வந்தால் நினைவாற்றல், செறிவு அதிகரிக்கும். இதனால் மனசோர்வு குறையும், நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது:

காபி குடிப்பது கல்லீரலுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக சர்க்கரை இல்லாத காபி குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம், கொழுப்பு கல்லீரல் போன்ற நோய்களின் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளன. இது தவிர கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

இதையும் படிங்க:  காபி, டீ குடிப்பது புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் : புதிய ஆய்வில் தகவல்..

சர்க்கரை இல்லாத காபி குடித்து வந்தால், மனநிலை மாற்றங்கள் மற்றும் மனசோர்வு காண வாய்ப்புகள் குறையும். காபியில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கும் போது மூலையில் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற ரசாயனங்கள் சுரக்கப்படுவது ஊக்குவிக்கிறது. இது உங்களது மனநிலையை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

ஆக்சிஜனேற்றங்கள் அதிகரிக்கும்:

காபியில் பல வகையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கலால் ஏற்படும் சேதத்தில் இருந்து உங்களது உடலை பாதுகாக்க உதவுகிறது. நீங்கள் சர்க்கரையை சேர்க்கும்போது அது ஆக்சிஜனேற்றத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதுவே நீங்கள் சர்க்கரை இல்லாமல் காபி குடிப்பதன் மூலம் உங்கது உடலுக்கு அதிக ஆக்சிஜனேற்றங்கள் கிடைக்கும்.

Read Entire Article