ARTICLE AD BOX

Aadhik Ravichandran: நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமாக உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அடுத்த கட்ட சூப்பர் அப்டேட் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் இரண்டு வருடங்களாக திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. அவரின் விடாமுயற்சி திரைப்படம் மிக தாமதமாக சூட்டிங் தொடங்க இதனால் அவருடைய அடுத்த படமான குட் பேட் அக்லிக்கும் அது பிரதிபலித்தது.
இருந்தும் ஒரே நாளில் இரண்டு சூட்டிங் விதம் தொடர்ச்சியாக 20 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் நடிகர் அஜித். அதனால் குட் பேட் அக்லி திரைப்படமும் ஏறத்தாழ எல்லா ஷூட்டிங் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இப்படத்தின் இசையமைப்பு பணியை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது.
படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஏனெனில் நடிகர் அஜித் இனிமேல் செப்டம்பர் மாதம் மட்டுமே மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. இதனாலே இப்படத்தின் ரிலீஸை ஏப்ரல் அல்லது மே மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை பிப்ரவரி 28ந் தேதிக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கிறது. 90 நொடி டீசரில் அஜித்குமார் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் டயலாக் ஒன்றையும் பேசி இருக்கிறாராம். இதனால் கண்டிப்பாக ஒரு சம்பவம் இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.