சமையல் குறிப்புகள்: மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது...

5 hours ago
ARTICLE AD BOX

1. தேங்காய் சட்னி செய்யும்போது பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

2. வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயததை சிறிளவு வதக்கி பஜ்ஜி செய்தால் வட்டம் பிரிந்து வராது.

3. மைக்ரோவேவ் அவனில் சமைக்கும்போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சிறிதாக நறுக்கியவை வெந்தும், பெரிதாக நறுக்கியவை வேகாமலும் இருக்கும்.

4. வாடிப்போன காய்கறிகளை வினீகர் கலந்த தண்ணீரில் பத்து நிமிடம் போட்டு வைத்த பிறகு எடுத்து சுத்தம் செய்து பயன் படுத்தினால் புதியது போல் ஆகிவிடும்.

5. பூரிக்கு மாவு பிசையும் போது, கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.

6. சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன் ஒரு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கைப் போடவும். விரைவில் சேனைக்கிழங்கு பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.

7. தோசைக்கு ஊற வைக்கும்போது அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றுடன் அவல், சிறிதளவு கொள்ளு, ஒரு கைப்பிடி சோயா இவற்றயும் சேர்த்து ஊற வைத்து அரைத்து தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

8. புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். அதுபோல் எந்த வகை புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது. அப்போதுதான் புலாவ் குழையாமல் இருக்கும்.

9. கேக் செய்யும் போது கலவையில் சிறிதளவு தேன் சேர்த்தால் கேக் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

10. குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறிகளை வதக்கும்போது வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கிவிட்டு, அதன் பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கினால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

11. உருளைக் கிழங்கு வறுவல் செய்யும் போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கி தூவினால், உருளைக்கிழங்கு வறுவல் " கமகம" வாசனையுடன் இருக்கும்.

12. குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்ற வற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்கு பதில் தக்காளி கெச்சப் சேர்த்து சமைத்துப் பாருங்கள். நிறமும், சுவையும் நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுவையான ராகி குக்கீஸ் செய்யலாம் வாங்க!
Microwave oven
Read Entire Article