ARTICLE AD BOX
முத்து முத்தாய் சமையல் குறிப்புகள்.
தோசைக்கு மாவு ஆட்டும்போது ஒரு கைப்பிடி ரவை சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும்போது நன்கு சிவந்து மொறுமொறுவென வரும். சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
பொங்கலில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.