சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? பிரதமர் மோடி விளக்கம்

19 hours ago
ARTICLE AD BOX

பிரதமர் நரேந்திர மோடி , செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் தத்துவம் குறித்த ஆழமான விவாதங்களுக்கு பெயர் பெற்ற அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் மூன்று மணி நேரம் விரிவாக உரையாடி இருக்கிறார்.

இந்த பாட்காஸ்ட் பற்றி எக்ஸ் பக்கத்தில் அறிவித்த லெக்ஸ் ஃப்ரிட்மேன், "என் வாழ்க்கையின் மிகவும் சக்திவாய்ந்த உரையாடல்களில் ஒன்றாக இருக்கும்" என்று கூறினார். இந்த எபிசோட் இன்று (மார்ச் 16) வெளியிடப்பட உள்ளது. 

இந்த கலந்துரையாடலின் முன்னோட்டத்தை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். "லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனா உரையாடல் உண்மையிலேயே கவர்ச்சிகரமானதாக இருந்தது. எனது குழந்தைப் பருவம், இமயமலையில் கழித்த ஆண்டுகள் மற்றும் பொது வாழ்வில் நான் மேற்கொண்ட பயணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசியிருக்கிறேன்!" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான பாட்காஸ்டில், பிரதமர் தனது வாழ்க்கையில் ஆர்எஸ்எஸ் வகித்த பங்கு மற்றும் சமூகத்தில் அதன் பங்களிப்பு குறித்து மிக விரிவாகப் பேசியுள்ளளார். 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா கலவரம் பற்றியும் விளக்கியுள்ளார். அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரித்து, தன் மீதான அவதூறு பிரச்சாரத்துக்கு பதில் சொல்கிறார்.

யார் இந்த லெக்ஸ் ஃப்ரிட்மேன்?

லெக்ஸ் ஃப்ரிட்மேன், ஒரு AI ஆராய்ச்சியாளர் மற்றும் பாட்காஸ்டர். தாஜிக் சோவியத் சோசலிச குடியரசின் சக்கலோவ்ஸ்கில் பிறந்தார். பின்னர் மாஸ்கோவிற்கு குடிபெயர்ந்தார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, 11 வயதில் அவரது குடும்பம் சிகாகோவிற்கு குடிபெயர்ந்தது.

ஃப்ரிட்மேன் டிரெக்சல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். 2010 இல் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 2014 இல் அதே பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

2014ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அங்கு AI-சார்ந்த பிரிவில் பணியாற்றினார். ஒரு வருடம் கழித்து அவர் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். 2015ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) ஆராய்ச்சி விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அந்தப் பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்கிறார்.

லெக்ஸ் ஃப்ரிட்மேன் ஒரு திறமையான தற்காப்புக் கலைஞரும் ஆவார். பிரேசிலிய ஜியு-ஜிட்சுவில் முதல்-நிலை பிளாக் பெல்ட் பெற்றுள்ளார்.

Read Entire Article