சமத்துவத்தை சீர்குலைப்பது எங்கள் வேலையல்ல!

2 hours ago
ARTICLE AD BOX

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல என மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ரூபாய் நோட்டில் உள்ள இந்தி மொழியை அழிக்க முடியுமா என மூத்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சு.வெங்கடேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது

''500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை'' எனப் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article