சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் பூஜா ஹெக்டே

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இதில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘கூலி’. ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்குகிறார். ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ படங்களின் மாபெரும் வெற்றிகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிகை ஒருவர் இடம்பெறுகிறார். அவர் பாடல் காட்சியில் ஆடுவார் என தகவல் பரவியது. நேற்று முன்தினம் யார் அந்த நடிகை என டிவிட்டரில் கேள்வி எழுந்து, வைரலானது. அந்த நடிகை யார் என்பது நேற்று அறிவிக்கப்படும் என சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பகல் 11 மணியளவில் அந்த நடிகை பூஜா ஹெக்டே என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உற்சாகம் அடைந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை வைரலாக்கினர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Read Entire Article