ARTICLE AD BOX
சனிக்கிழமை அதுவுமாக திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (பிப். 22-ஆம் தேதி) 12 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறைகளில் 21 அறைகளிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 22-ஆம் தேதியான நேற்று மொத்தம் 78,110 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 30,020 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.39 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறைகளில் 21 அறைகளிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.
- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜகவைச் சேர்ந்த அலிசா அப்துல்லா விடுத்த பரபரப்பு சவால்
- இந்திரஜா குழந்தையை பார்க்காத காரணம் இதுதான்! இந்த இடத்தில் இருந்து மாறிட்டாங்க.. போஸ் வெங்கட் ஓபன்
- ஒரே நடிகையை காதலித்த 3 நடிகர்கள்.. அவரை திருமணம் செய்ய போயி.. மச்சக்கார ஹீரோ.. இப்படியுமா கிசுகிசு?
- இந்தியாவிடம் மண்டியிட்ட வங்கதேசம்.. ஷேக் ஹசீனா போட்ட போடால் கதறும் முகமது யூனுஸ்.. என்ன நடந்தது?
- இப்படியா அசிங்கப்படுத்துவீங்க? புகழால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறிய சௌந்தர்யா
- நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க
- மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. வீடுகளில் மின் கட்டணம் மாறுது.. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்
- வங்கதேசத்தால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தான் போட்டியில் சிக்கல் இருக்காது.. அது எப்படி?
- கமலுக்காக தான் அந்த முடிவு எடுத்தேன்.. எங்கள் பிரிவு விதி அல்ல..! ட்ரெண்டாகும் ஸ்ரீவித்யாவின் பேட்டி
- முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்
- ஈரோட்டு தோட்டத்தில் இருட்டில் நடமாடிய 3 உருவங்கள்.. 19 வயது பெண்ணால் ஆடிப்போன கோபி.. காதலன் நிலைமை?
- அப்பா ஆகப் போகிறார் பிக்பாஸ் ஷாரிக்.. குழந்தை குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து