ARTICLE AD BOX
வேத சாஸ்திரத்தின்படி பல கிரகங்களின் பெயர்ச்சி பல ராசிகளின் தாக்கங்களை உருவாக்கும். சனி ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படுகின்றார். சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராகு மற்றும் சனியின் சேர்க்கை மூலம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மையை உண்டாக்கப்போகின்றது. அவர்கள் எவ்வித நன்மைகளை பெறப்போகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் |
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பலவிதமான நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். |
தனுசு |
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி, ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் குவியும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வணிகத்தில் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வசதிகள் பெருகும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டாக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. |
கும்பம் |
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணியிடத்தில் புத்திசாலித்தனத்தால் வேலைகளை திறம்பட செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையில் நிறைய பணம் சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).