சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு நல்லதா?.. கெட்டதா?.. முழு விவரம் இதோ

5 hours ago
ARTICLE AD BOX

சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு நல்லதா?.. கெட்டதா?.. முழு விவரம் இதோ

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறள்ளன. இது மேஷம் ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.

குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

Satrun Guru Rahu Ketu Peyarchi Mesham

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது மேஷம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.

மேஷம்: மேஷ ராசிக்கு நன்மை - தீமை இரண்டும் சரி சமமாக இருக்கும். மேஷத்துக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது. ஆனால் அதன் தாக்கம் குறையும் விதமாக 11 ஆம் இடத்துக்கு ராகு பெயர்ச்சி ஆகவுள்ளார். அதனால் ஏழரை சனியை நினைத்து பெரிதாக பயப்பட வேண்டியதில்லை.பொதுவாக மேஷத்தில் சூரியன் உச்சமாக இருக்கும். எப்பேற்றபட்ட பிரச்னையையும் உங்கள் ஆளுமையால் சமாளிக்கும் பக்குவம் உங்களிடம் உள்ளது.

நீண்ட காலமாக திட்டமிட்ட வெளியூர், வெளிநாடு பயண முயற்சிகள் சாத்தியமாகும். அந்தப் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனைப்படுபவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியத்துக்கான மருத்துவ சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

ஏழரை சனியில் நிறைய விரங்கள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் அந்த விரயங்களை ஈடுகட்டுமளவுக்கு ராகு வருமானத்தை கொடுத்துவிடுவார். நீண்ட காலமாக பூர்விக சொத்துகளை விற்பனை செய்வதில் இருந்த தடை நீங்கும். சொத்துகளை விற்று ஆதாயமடைவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் உயர்கல்வி படிப்பதற்கான முயற்சிகள் நிறைவேறும்.

கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த திருமண தடைகள் விலகி, இந்த காலத்தில் திருமணம் நடைபெறும். சுபசெலவுகள் நிச்சயம் உண்டு. தந்தை உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்:

செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் வாங்குவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி 12 ஆம் இடத்தில் இருந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் செலவு அதிகரித்து, வருவாய் குறையும் நிலை இருக்கும். எனவே கடன் சுமை அதிகரிக்கும்.

நிதானம் தேவை

எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தொழிலில் முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். காரியங்களில் கால தாமதம் இருக்கும். உடல்நலத்தில் அவ்வபோது சில பிரச்னைகள் வந்து செல்லும். ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

More From
Prev
Next
English summary
Saturn, Guru, Rahu Ketu Transit to be happen in this 2025 year. This will give good benefit to Mesham (Aries). However some parts will also give trouble.
Read Entire Article