சந்தானம்தான் பிடிக்காது!. யோகிபாபு ஓகே!.. வைகை புயல் காட்டிய ரியாக்‌ஷன் பாருங்க!..

5 hours ago
ARTICLE AD BOX

Vadivelu: எல்லோருக்கும் பிடித்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. பல வருடங்களாகவே சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். கவுண்டமணி - செந்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியபின் வடிவேலு அந்த இடத்தை பிடித்தார். தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு சினிமாவில் நடித்து வந்தார்.

பெரும்பாலும் மறைந்த நடிகர் போண்டா மணி சிங்கமுத்து, பாவா லட்சுமணன், அல்வா வாசு, தம்பி ராமையா, மறைந்த நடிகர் கிருஷ்ண மூர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், மகாநதி சங்கர் என பலரும் அவருடன் இருந்தனர். ஒரு படத்தில் நடிக்கும்போது யார் யார் தேவையோ அவர்களுக்கு மட்டும் அன்று வடிவேலு வேலை கொடுப்பார்.


அதிலும் அவர் சில டெக்னிக்கை பின்பற்றுவார். தினமும் சாலிகிராமத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் அவர்கள் எல்லாம் வந்து கீழே நிற்பார்கள். வடிவேலு மேலே இருப்பார். கீழே நிற்பவர்கள் யாரும் உட்காரக்கூடாது. அடிக்கடி எட்டி எட்டி பார்ப்பார் வடிவேலு. யாராவது அமர்ந்திருந்தால் அவருக்கு அன்று வாய்ப்பு இல்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் நின்று கொண்டே இருப்பவர்களுக்குதான் வாய்ப்பு கொடுப்பார் வடிவேலு. அதேபோல், படப்பிடிப்புல் வடிவேலு சேரில் அமர்ந்திருக்கும்போது அவருடன் நடிக்கும் நடிகர்கள் கீழேதான் அமர வேண்டும். வடிவேலுவுக்குள் இருக்கும் சைக்கோ புத்தி அவருடன் நடித்த காமெடி நடிகர்களுக்கும், அவரை வைத்து படமெடுத்த இயக்குனர்களுக்கும் மட்டுமே தெரியும்.

வின்னர் உள்ளிட்ட சில படங்களில் வடிவேலுவை வைத்து காமெடி காட்சிகளை எடுத்தார் சுந்தர்.சி. அதன்பின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், அரண்மனை என சில படங்களில் சந்தானத்தை வைத்து இயக்கினார். இந்த படங்களிலெல்லாம் காமெடி காட்சிகள் நன்றாகவே இருந்தது.


இதனால் கோபப்பட்ட வடிவேலு ‘இனிமேல் உன் படத்தில் நடிக்கமாட்டேன்’ என சுந்தர்.சியிடம் சொன்னார். அவரை குஷ்பு சம்மதிக்க வைத்து நகரம் மறுபக்கம் படத்தில் நடிக்க வைத்தார். அப்படி நடித்தபோது சுந்தர்.சிக்கு அவ்வளவு குடைச்சல் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் இந்த படத்தில் நடிக்கவே இல்லை என கோபப்பட்டு சுந்தர் சி. சென்றுவிட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. அதேபோல், தனது எந்த படத்திலும் சந்தானம் நடிக்கக் கூடாது என்பதில் வடிவேலு உறுதியாக இருப்பார். சுந்தர் சி கேட்டும் அதை அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

இப்படி கெடுபிடிகளை காட்டி வந்த வடிவேலுவை திரையுலகினரே ஒருகட்டத்தில் ஒதுக்கிவிட்டனர். 4 வருடங்களுக்கு பின் அவர் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் ஓடவில்லை. இப்போது மீண்டும் காமெடி நடிகராக நடிக்க துவங்கிவிட்டார். சுந்தர்.சி யுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் சுந்தர் சியின் பிறந்தநாள் பார்ட்டியில் வடிவேலு கலந்துகொண்டார். அப்போது அந்த பார்ட்டிக்கு வந்திருந்த யோகிபாபுவுடன் நெருக்கமாக நின்று போட்டோவுக்கும் போஸ் கொடுத்திருக்கிறார்.


இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ‘சந்தானத்தை வேண்டாம் என சொன்னவர் யோகிபாபு கூட போட்டோ எடுக்காருன்னா அவர ஒரு காமெடி நடிகானாகவே வடிவேலு நினைக்கல போல’ என கொளுத்தி போட்டு வருகிறார்கள்.

Read Entire Article