ARTICLE AD BOX

சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தானம். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இதனை இயக்குகிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆப்ரோ இதற்கு இசையமைக்கிறார்.
Majaa Vibe🤩😍
First Single from #DDNextLevel on 26 Feb 2025! ✨
In Cinemas May 2025 #DhillukuDhuddu @arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar @iamyashikaanand #Maran #MottaRajendran @ofrooooo @dopdeepakpadhy… pic.twitter.com/vxVMz4pZH2
இந்த படத்தில் சந்தானம் தவிர செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படமானது 2025 மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.