ARTICLE AD BOX
சதுர்கிரக யோகத்தால் மீன ராசிக்கு ராஜயோகம்.. பணம், செல்வம்னு யோகம் கொட்டும்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது மீனம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
மீனம் ராசிக்கு உங்கள் ஜென்ம ஸ்தானமான ராசிக்குள்ளேயே சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை நடைபெறவுள்ளது. குரு பகவானை அதிபதியாக கொண்டவர்கள் மீன ராசியினர். யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு பார்த்து பார்த்து செய்வீர்கள்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கையே திருப்பி போட்டது போல எக்கச்சக்க பிரச்னைகளால் திக்கு முக்காடியிருப்பீர்கள். உறவுகளின் வசை சொற்களால் காயமடைந்திருப்பீர்கள். கடன் சுமை கழுத்தை நெரித்திருக்கும். நிறைய பொருள் இழப்பும் ஏற்பட்டிருக்கும். ஜென்ம ஸ்தானத்தில் சுக்கிரன் உச்ச நிலை, புதன் நீட்சமாக இருப்பதால் நீட்ச பங்க ராஜயோகம் ஏற்படுகிறது.
இழந்த சுய கௌரவம் உள்ளிட்டவற்றை மீட்கும் காலகட்டமாக இது இருக்கும். தொழிலில் இழந்த செல்வாகை திரும்பி பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும். கடந்த காலங்களில் உங்களின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் கூட தற்போது உங்களைப் பற்றி புரிந்து தேடி வருவார்கள். விட்ட இடத்தில் இருந்து வெற்றி கணக்கை தொடங்குவீர்கள்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் நான் தான் ராஜா என்பது போல முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட அணுகூலங்கள் கிடைக்கும். வெளிநாடு ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்போர் நல்ல ஏற்றத்தை காண்பீர்கள். இந்த காலத்தில் உங்களின் திறமை சிறப்பாக வெளிப்படும்.
உத்யோகத்தில் புதிய உச்சம் தொடுவீர்கள். ஜென்ம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட பயணங்களால் யோகம் உண்டு. உங்களின் நீண்ட கால ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனதுக்கு எதிர்பார்த்தபடி புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசுப் பணிக்கு முயற்சி செய்வோருக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அந்தஸ்து உயரும். திருமணத்தில் இருந்த தடைகள் விலகி தற்போது திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனையில் இருக்கும் தம்பதிக்கு இந்த காலத்தில் குழந்தை பேறு கிடைக்கும். கணவன் - மனைவி உறவில் புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
சொத்துகளை வாங்க, விற்க இது சரியான காலம். நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. கல்வியில் சிறந்த மாற்றம், முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்னைகள் ஓரளவுக்கு குறையும். ஆன்மிகம் சார்ந்த பயணம் இருக்கும். ராகுவால் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் எழும். மன அழுத்தம், தூக்கமின்மை இருக்கும்.