சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!

3 hours ago
ARTICLE AD BOX

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி இன்று (பிப். 25) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ்பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வரும் 28 வரையான நான்கு நாள்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Read Entire Article