ARTICLE AD BOX
கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள 15 மாணவர் விடுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. விடுதிகளின் அனைத்து அறைகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது போதைப் பொருள் எதுவும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சோதனை குறித்து காவலர்கள் தகவலாக கூறியதாவது, மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் மாணவர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்