கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று

4 hours ago
ARTICLE AD BOX

கோவை,

கோவையில் உலக தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவை தேர்தல் வாக்குறுதியில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக நான்கு இடங்கள் முதல் தேர்வு செய்யப்பட்டதில் அதில் ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையின் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதன்படி ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளுக்கு, இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கி உள்ளது.

கோவையில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உணவகம், ஸ்போர்ட்ஸ் பார், உயர் தர இருக்கை வசதி, உட்புற பயிற்சி அரங்கம், பீல்டிங் மண்டலம், வீரர்கள் ஓய்வறை, விரிவுரை அரங்குகள், கிளப்ஹவுஸ், விஐபி அறைகள், ஸ்பாஸ், கார்ப்பரேட் அறைகள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article