கோவை: வெள்ளியங்கிரி மலையில் காட்டுத்தீ... வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன?

2 days ago
ARTICLE AD BOX

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

கடந்தாண்டு வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றவர்களில் சிலர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்தாண்டு பக்தர்கள் பாதுகாப்புக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளியங்கிரி மலை

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக வெயில் அதிகமாக இருந்தால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதனிடையே வெள்ளியங்கிரி மலையில் கேரள எல்லையில் சிறிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது.

தகவல் அறிந்தவுடன் வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் உள்ளூர் பழங்குடி மக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.

இதன் காரணமாகத் தமிழக வனப்பகுதிக்குள் தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை கூறுகையில், “வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைக்காக வனத்துறை, பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு ஆகியோரை உள்ளடக்கிய 6 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளியங்கிரி மலை காட்டுத்தீ

வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். எனவே, பக்தர்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்து வரக்கூடாது.” என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்தடுத்து நடக்கும் உயிரிழப்புகள் - கோவை வெள்ளியங்கிரி மலை செல்வோர் கவனத்துக்கு..!

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Read Entire Article