ARTICLE AD BOX
கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
அதன்படி, கோவை மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோவை வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்தும், கண்டன பதாகைகளை ஏந்தியும் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், தமிழ்நாடு அரசு இந்த சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெரும் வரை தமிழக வெற்றி கழகம் சார்பில் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் த.வெ.க. பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அனைவரும் விஜய் வாழ்க தவெக வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை