கோவை மக்களே தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்க.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

3 days ago
ARTICLE AD BOX

கோவை மக்களே தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்க.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Coimbatore
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பில்லூர் 1 மற்றும் 2 ஆகிய குடிநீர்த் திட்டத்தில் குழாய்களில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சில பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களில் இடைவெளி அதிகமாகும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமிருக்கும் மாநகராட்சிகளில் கோவை மாநகராட்சியும் ஒன்றாகும். கோவை மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் என லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அமை, மேட்டுப்பாளையத்தை அடுத்த பில்லூர் அணை மற்றும் பொள்ளாச்சி ஆழியாறு அணை ஆகியவை உள்ளன.

Coimbatore Water supply

கோவை மாநகராட்சியைப் பொருத்தவரை சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 ஆகிய திட்டங்கள், வடவள்ளி - கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஆழியாறு அணையின் நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணையின் குடிநீர்த் திட்டங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்வது வழக்கம். அந்த சமயங்களில், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும்.

அந்த வகையில், பில்லூர் 1 மற்றும் 2 ஆகிய குடிநீர்த் திட்டத்தில் குழாய்களில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் குடிநீர் விநியோக நாட்களில் இடைவெளி அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரித்து கொண்டுவரும் பிரதான குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்பு பணிகள் 24.022025 முதல் 25.02.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், பில்லூர் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால், இத்திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கணபதி மாநகர், காந்திமா நகர், சங்கலூர் ரோடு கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சவுரிபாளையம், காந்திபுரம், வ உ சி பூங்கா, சித்தாபுதூர், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகமாகும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
English summary
Maintenance work is being carried out for two days on February 24 and 25 in the pipes of Pillur 1 and 2, which distribute water to Coimbatore Municipal Corporation areas. Due to this, it has been reported that the gap in drinking water supply days will increase in some areas.
Read Entire Article