ARTICLE AD BOX

கோபியிடம் இனியா சிக்க ஆகாஷ் பயத்தில் நடுங்கியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று எழில் கிட்டயும் அமிர்தா கிட்டயும் குழந்தை பெத்துக்கிற விஷயத்தை பற்றி இப்போ பேச வேண்டாம் சினிமா பீல்டு கொஞ்சம் பிரஷரா இருக்கும் அதுவும் படம் பண்ணிக்கிட்டு இருக்கான் இந்த டைம்ல நம்ம வீட்லயும் பிரஷர் பண்ண முடியாது என்று சொல்ல ஈஸ்வரி எந்த டைரக்டரும் குழந்தையை பெத்துக்கலையா எல்லாமே கல்யாணம் ஆகி கூடிய சீக்கிரம் நடந்தா தான் கரெக்ட்டா இருக்கும் வயசான பிறகு நடந்தால் எப்படி என்று கேட்கிறார். இது மட்டும் இல்லாம நீயும் பாக்யாவும் கேட்க வேண்டிய கேள்வி இது. அவ பேசவே மாட்டா நீ கேட்க மாட்ட அதனாலதான் நான் இந்த விஷயத்தை பத்தி பேசுறேன்.
நான் இதைப் பத்தி அவங்க கிட்ட கேட்காம இருக்கவே மாட்ட எழில் கிட்டயும் அமிர்தா கிட்டயும் மாத்தி மாத்தி நான் பேசிக்கிட்டே தான் இருப்பேன் அவங்க மனச கலைச்சு குழந்தை பெத்துக்க வைப்பேன் என்று சொல்லிவிட்டு நீ போய் தூங்கு என்று அனுப்பி வைக்கிறார். கோபி வெளியில் வந்து கதவை சாத்திவிட்டு அவன் என்னடா நான் உங்க பேச்சை நம்பி தான் நான் வந்து இருக்கேன் இனிமேல் இந்த பேச்சை வரக்கூடாதுன்னு சொல்லிட்டு போயிருக்கா இவங்க இப்படி சொல்றாங்க கடைசில பாக்யா சொன்னதுதான் உண்மை ஆயிடுச்சு என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரூமில் இனியா ஆகாஷிடம் போனில் பேசிக் கொண்டிருக்க பாக்யா வந்து விடுகிறார் உடனே பிரண்டிடம் பேசுவது போல போனை வைத்து விடுகிறார்.
இவ்வளவு நேரம் ஆயிடுச்சு தூங்கிருப்பேன்னு நினைச்சேன் என்று சொல்ல இல்ல ஃப்ரெண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார். பாக்கியா கால் வலியில் இருக்க ஏதாவது மருந்து போட்டு விடவாமா என்று கேட்ட அதெல்லாம் ஒன்னும் வேணாம் படு என்று சொல்லுகிறார். அசைன்மென்ட் முடிச்சிட்டியா என்று கேட்க இல்லம்மா இன்னும் பாதி இருக்கு என்று சொல்லுகிறார் டைமே இல்லை என்று சொல்ல டைம் இல்லையா இல்ல டைம் வேஸ்ட் பண்றியா என்று கேட்கிறார் என்னமா சொல்ற என்று இனியா கேட்கிறார் நீ எப்ப பாத்தாலும் போன் பேசிக்கிட்டு இருந்தா எப்படி டைம் இருக்கும் ஏதாவது ஒரு அர்ஜெண்டுக்கு பண்ணா கூட பிஸின்னு தான் வருது அப்படி நீ யார் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் என்று கேட்க பிரண்ட்ஸ் கூட தான் பேசுறேன் காலேஜ்ல அசைன்மென்ட் அடுத்து கல்ச்சுரல்ஸ் எல்லாம் இருக்கு அதனால அதை பத்தி டிஸ்கஸ் பண்ண தான் பேசிகிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார் உடனே நீ போன் பேசுறத குறைச்சுக்கோ என்று சொல்ல இனிமே நான் போனே பேசல போதுமா என்று இனியா கோபித்துக் கொள்ள நீ போனே பேச வேண்டாம்னு சொல்லல குறைத்துக்கொள் தான் சொல்ற என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வாக்கிங் சென்று விட்டு வருகிறார். கிச்சனில் பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்க கோபி பாக்கியாவை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி இன்னைக்கு சீக்கிரமா எழுந்துட்டியா கோபி என்று கேட்க ஆமாமா இன்னைக்கு அஞ்சு மணிக்கு முழிப்பு வந்துடுச்சு ஆனா கீழே இறங்கி வந்தால் பாக்யா அ அப்பையும் கிச்சன்ல வேலை பார்த்துகிட்டு இருந்தா என்று சொல்ல இப்போ ஆள் அதிகமாகிட்டாங்க எல்லாருக்கும் சமையல் செய்யனும்னா சீக்கிரமா தான் எழுந்து கொள்ளும் என்று சொல்லுகிறார். பாக்யா கிச்சனில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் ஜெனி வந்து காய்ச்சின பால் இருக்கா ஆன்ட்டி என்று கேட்கிறார் இல்லம்மா எல்லாத்தையும் டீ போட்டுட்டேன் என்று சொல்ல குழந்தைக்கு பால் வேணுமா என்று சொல்லி ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து காசு கொடுத்துடுவேன் என அந்த வேலையும் செய்கிறார் செல்வி அமிர்தா எங்க அக்கா என்று கேட்க நிலாவுக்கு கொஞ்சம் கோல்ட், ஃபீவர் இருக்கு கசாயம் கொடுத்து இருக்கேன் என்று சொல்லுகிறார்
இதையெல்லாம் கோபி கவனித்துக் கொண்டே இருக்க இனியா வந்து டிபன் ரெடியாயிடுச்சா அம்மா என்று கேட்க இன்னும் பத்து நிமிஷம் ஆகும் என்று சொல்ல இன்னைக்கு காலேஜுக்கு சீக்கிரமா போகணும் என்று சொல்லுகிறார் அதை முன்னாடியே சொல்ல மாட்டியா ரெடி ஆயிட்டு வா கரெக்டா இருக்கும் என சொல்லிவிட்டு ஈஸ்வரி இடம் வந்து எல்லாருக்கும் டிபன் ரெடி பண்ணிட்டேன் இனியாவுக்கு லஞ்ச் கட்டியாச்சு மதியம் லஞ்சுக்கு மட்டும் நான் ரெஸ்டாரண்டில் இருந்து கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல பாக்யா வீட்டிலேயே செய்ய வேண்டியது தானே என்று கேட்கிறார் இல்ல அத்தை நேத்தே ரெஸ்டாரன்ட் போக லேட் ஆயிடுச்சு அதனால தான் என்று சொல்லுகிறார் குழந்தைகளுக்குமா என்று சொல்ல இல்ல குழந்தைகளுக்கு இனியாக்கு செய்யும்போது செஞ்சிட்ட என்று சொல்ல ஈஸ்வரி எனக்கு மட்டுமாவது நீ கொஞ்சம் ஏதாவது சாப்பாடு கலரி வச்சிர வேண்டியதுதானே என்று சொல்லுகிறார் உடனே கோபி விடுங்கம்மா எவ்வளவு வேலை செய்ய முடியும் ஈஸ்வரி ரெஸ்டாரன்ட்ல இருந்து தானே வருது என்ன வெளியே ஓட்டல்ல இருந்தா சாப்பிட போறீங்க என்று கோபி ஈஸ்வரியே சம்மதிக்க வைக்க ஈஸ்வரியும் ஒத்துக்கொள்கிறார். பிறகு நான் ரெஸ்டாரன்ட் கெளம்பா ரெடி ஆயிட்டு வரேன்னு பாக்கியா சென்று விடுகிறார்.
பிறகு எழில் அமிர்தா கிச்சனுக்கு வர பாக்யா கொஞ்ச நேரம் காபி போடறேன் என்று சொல்ல செல்வி நான் போட்டுக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். நிலாவுக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு என்று அமிதாவிடம் கேட்க ஃபீவர் குறைஞ்சி இருக்குமா? இன்னும் லைட்டா இரும்பி கிட்டு இருக்கா நான் நிலாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு உங்க கூட ரெஸ்டாரன்ட் வரேன் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் நீ பாப்பா பார்த்துக்கோ என்று சொல்ல, அமிர்தாவும் சரி என சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் இனியா கீழே கிச்சனுக்கு வருகிறார் வா இனியா சாப்பிடு என்று கூப்பிட எனக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு அதனால எனக்கு வேண்டாம் என சொல்லுகிறார் உனக்காக தான் எல்லாமே செஞ்சிருக்கேன் மதிய சாப்பாடு எடுத்துட்டு போ என்று சொல்ல எனக்கு எதுவுமே வேண்டாம் என இனியா பதற்றம் ஆகவே இருக்கிறார். சரி டிபன் பாக்ஸ்லையாவது இட்லி போட்டு தரேன் என்று சொல்ல இனி யார் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க இனியாவின் போன் ஹாலில் இருக்கும் டேபிள் மேல் இருக்க கோபி கிச்சனில் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார் உடனே போனில் மெசேஜ் வரும் சத்தம் கேட்க அதில் எட்டு மணிக்கு மீட் பண்ணலாம் என்று ஒரு மெசேஜ் வருகிறது. அதை கோபி கவனித்து அதிர்ச்சியாகி விடுகிறார். உடனே இனியா கிளம்ப கோபி எட்டு மணிக்கு கூட ஆகல அதுக்குள்ள என்னமா அவசரம் என்று சொல்ல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என்று சொல்லுகிறார். எதுல போற என்று கேட்க காலேஜ் பஸ் என்று சொல்லுகிறார் ஸ்பெஷல் கிளாஸ் என்றால் காலேஜ் பஸ் கூட விடுறாங்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க இனியா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் இனியாவை வற்புறுத்தி எனக்கு அங்க கொஞ்சம் வேலை இருக்கு நானே டிராப் பண்றேன்னு காரில் அழைத்து செல்கிறார். இதையெல்லாம் கவனித்த எழில் இவரு ஓவர் நல்லவரா மாறிட்டாரு என்று சொல்ல அதற்கு செல்வி அவர் நல்லவராக மாறினாலும் கெட்டவரா மாறினாலும் அக்காவுக்கு தான் பிரச்சனை என்று சொல்லுகிறார்.
கோபி இனியாவிடம் என்ன கேட்கிறார்?இனியா என்ன சொல்லுகிறார்? கோபியிடம் இனியா சிக்கினாரா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post கோபியிடம் சிக்கிய இனியா, பயத்தில் நடுங்கிய ஆகாஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.