ARTICLE AD BOX
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கோடைவெயில் கொளுத்தி வருவதால் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து குமரிக்கு தர்பூசணி பழம் வருகை அதிகரித்துள்ளது. தர்பூசணி கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது இரவு முதல் காலை வரை பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ச்சியான சீதோசன நிலை நீடித்து வருகிறது. ஆனால் காலை வேளையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இனி வரும் நாட்களில் 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். வெயிலை சம்மாளிக்க குளிர்பானங்களை அதிக அளவு மக்கள் வாங்கி செல்ல தொடங்கியுள்ளனர். இளநீர், நுங்கு, தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.
திண்டிவனம், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு தர்பூசணி வருகிறது. தற்போது தர்பூசணி பழசீசன் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கியது. தற்போது குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தர்பூசணி பழம் அதிகமாக வரத்தொடங்கியுள்ளது. தற்போது திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வந்துகொண்டு இருக்கிறது. தர்பூசணி தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. நீர்சத்து அதிகமாக உள்ளதால் மக்கள் தர்பூசணி பழங்களை அதிகமாக வாங்கி செல்கின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை சூடு பிடித்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக தர்பூசணி குமரிக்கு வரும்.
அந்த வேளையில் தர்பூசணி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post கோடைவெயில் கொளுத்துகிறது: குமரியில் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.