கோடைகாலம்.. வீட்டில் AC மாட்ட போறீங்களா? இனி 20° செல்ஸியஸுக்கு கீழ் வைக்க முடியாது.. புது ரூல்?

6 hours ago
ARTICLE AD BOX

கோடைகாலம்.. வீட்டில் AC மாட்ட போறீங்களா? இனி 20° செல்ஸியஸுக்கு கீழ் வைக்க முடியாது.. புது ரூல்?

Weather
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகரித்து வரும் மின் தேவையைக் கட்டுப்படுத்த ஏசி நிறுவனங்களுக்கு புதிய வரம்பை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் காரணமாக இனி உங்கள் ஏசி வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படலாம்.

அதாவது வெப்பநிலையை 18, 19 டிகிரி செல்ஷியஸில் எல்லாம் இனி வைக்க முடியாது. புதிய மாடல்களில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வர ஆலோசிக்கப்படுகிறதாம். வெப்பநிலையை குறைவாக வைக்க வைக்க.. மின்சார தேவை அதிகரிக்கும். காற்று மாசும் அதிகரிக்கும்.

Weather

அதிலும் பழைய மாடல் ஏசிகள் 40-50% அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், 5-நட்சத்திர ஏசி விற்பனையை அதிகரிக்குமாறும், இதற்கு கூடுதல் தள்ளுபடி வழங்கும்படியும் உற்பத்தியாளர்களை எரிசக்தித் திறன் பணியகம் (BEE) வலியுறுத்தியுள்ளது. மின்சார தேவையை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாம்.

கோடைகாலம் ஏசி:

கோடை காலம் வருவதால், ஏசி விற்பனை 25-30% அதிகரித்து உள்ளது. ப்ளூஸ்டார் மற்றும் ஹையர் போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க தொடங்கி உள்ளார்.

கம்ப்ரசர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மூலப்பொருள் செலவுகள் மற்றும் கடுமையான தர நெறிமுறைகள் காரணமாக இந்த முறையே ஏசி விலைகள் ₹1,500-2,000 வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூஸ்டார் பிப்ரவரியில் 3% விலையை உயர்த்தியது, அதே நேரத்தில் ஹையர் 4-5% உயர்வை பரிசீலித்து வருகிறது.

ஹையர் மார்ச் மாத விற்பனையில் 50% முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2026-க்குள் ₹700 கோடியில் ஏசி தொழிற்சாலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் தேவை, கடுமையான வெயில் வானிலை, அதிக செலவு மற்றும் விநியோக தடைகள் காரணமாக இந்த முறை ஏசி விலை உயரலாம். இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் ஏசி வாங்கினால் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பர் இங்கே பார்க்கலாம்.


ஏசியை பராமரிப்பதற்கான 10 முக்கிய குறிப்புகள்:

உங்கள் அறைக்கு ஏற்ற ஏசி லிட்டரை தேர்வு செய்யுங்கள். குறைந்த லிட்டர் மொத்த அறைக்கும் பயன்படாமல் போகலாம்.

சிலர் இன்வெர்ட்டர் மாடல் ஏசிக்கள் வேகமாக அறையை குளிர்ச்சியாக மாற்றாது. வேகமாக அரை குளிர்ச்சியாக.. இன்வெர்ட்டரை தனியாக வாங்கி..இன்வெர்ட்டர் மாடல் அல்லாத ஏசிக்கள் வாங்க வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏசியை சுத்தம் செய்யுங்கள் - ஏ.சி.யின் ஃபில்டர் மற்றும் காயில் மீது தூசி மற்றும் அழுக்கு படிந்து அதன் செயல்திறனை குறைக்கும், எனவே அவற்றை மாதம் ஒருமுறை சுத்தம் செய்யுங்கள்.

ஏ.சி. ஃபில்டரை மாற்றவும் - அதிக நேரம் பயன்படுத்தினால் ஏ.சி. ஃபில்டர் மாசுபட்டு காற்றை முறையாக வடிகட்டாது. 3-6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.

காயில்களைக் கழுவுங்கள் - ஏ.சி.யின் எவாப்பரேட்டர் மற்றும் கண்டென்சர் காயில்களை வருடத்திற்கு ஒருமுறை கழுவி தூசியை அகற்றுங்கள்.

வெளிப்புற யூனிட்டை சுத்தமாக வைத்திருக்கவும் - கண்டென்சர் யூனிட் (வெளியில் இருக்கும் பகுதி) மீது குப்பை, இலைகள் படிந்தால், அதனை சுத்தம் செய்யுங்கள்.

குளிர்ச்சியை சரியாக அமைக்கவும் - அறையின் அளவுக்கு ஏற்ப 22°C - 25°C இடையில் temperature வைத்தால் மின்சாரா செலவு குறையும்.

ஏ.சி.யை உடனே அணைக்காதீர்கள் - வெப்பநிலை திடீரென்று மாறும் போது ஏ.சி. மொத்தமாக அணைக்காமல்.. முதலில் fan mode அல்லது sleep mode இல் மாற்றவும். அதன்பின் சிறிது நேரம் கழித்து அணைக்கவும்.

ஏசி வாயை அடைக்க கூடாது- ஏ.சி.யின் air vents அருகில் பொருட்கள் வைக்காமல் திறந்த நிலையில் வைத்தால் காற்று சரியாக பாயும். ஏசிக்கும் பிரச்சனை ஏற்படாது.

குளிரூட்டும் வாயுவை சரிபார்க்கவும் - ஏ.சி. சிறப்பாக இயங்க அனுமதிக்கப்பட்ட அளவில் refrigerant gas இருக்க வேண்டும், இல்லையெனில் உடனே சரிபார்க்கவும்.

மின் இணைப்புகளை சரிபார்க்கவும் - ஏ.சி.யின் wiring மற்றும் circuit பாதுகாப்பாக உள்ளதா என்று வருடத்திற்கு ஒரு முறை செக் செய்யுங்கள்.

பராமரிப்பு செய்யுங்கள் - வருடத்திற்கு ஒரு முறை ஒரு AC technician மூலம் முழுமையாக சர்வீஸ் செய்வது.. ஏ.சி.யின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.

More From
Prev
Next
English summary
Are you going to buy an AC? Why you may not have these functions anymore?
Read Entire Article