ARTICLE AD BOX

தற்போது தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. இந்த கோடைகாலத்தில் அனைவருமே சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்று அதிகமான மின்சார கட்டணம் செலுத்துவது தான். ஏனென்றால் வீட்டில் ஏசி, காற்றாடி என அதிக அளவில் உபயோகிப்பது வழக்கம். எனவே மின்சார செலவை குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். அதாவது வீட்டில் அனைத்து இடங்களிலும் எல்இடி விளக்குகளை பயன்படுத்தலாம். இதனால் மின்சார செலவு மிச்சமாகும்.
அடுத்ததாக வீட்டில் ஏசி இருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்வெர்ட்டர் இல்லாமல் ஏசி வாங்கக்கூடாது. மேலும் வீட்டில் ஏசி இயங்கி கொண்டிருக்கும் போது மின்விசிறியை இயக்கக் கூடாது. மேலும் உங்களுடைய வீட்டில் மைக்ரோ ஓவன் இருந்தால் அதன் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். முக்கியமாக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை மறக்காமல் அணைக்க வேண்டும். இவ்வாறு அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினால் கோடை காலம் மின்சார செலவை மிச்சப்படுத்தலாம்.