ARTICLE AD BOX
ஒடிசாவில் கோடை வெய்யிலை தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படும் வெப்ப அலைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பதற்காக தமிழகத்தில் மே மாதம் முழுவதும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அதேபோல, மார்ச் மாதத் தொடக்கத்திலேயே வெய்யிலின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த நிலையில், ஒடிசாவில் வெப்ப அலைகளில் மாணவர்கள் காப்பதற்காக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரம் காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்றுமுதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.