கோடை: மேட்டுபாளையம் - உதகை சிறப்பு ரயில் அறிவிப்பு!

5 hours ago
ARTICLE AD BOX

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேட்டுபாளையம் - உதகை மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வரை ஆர்வம் காட்டுவதால், இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்துவிடும்.

வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை தரவிருப்பதால், சிறப்பு மலை ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

ஏற்கெனவே, நாளைதோறும் காலை 7.10 மணிக்கு மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கும், பகல் 2 மணிக்கு உதகையிலிருந்து மேட்டுபாளையத்துக்கும் மலை ரயில் இயக்கப்படுகிறது.

இதுதவிர, மார்ச் 28 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு வாரத்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கும், உதகையிலிருந்து மேட்டுபாளையத்துக்கு சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article