ARTICLE AD BOX
கோடை காலத்தில் நாவல் பழம் சாப்பிட்டால் ரொம்ப நல்லது..?? ஏன் தெரியுமா..??
கோடை காலத்தில் பல்வேறு இடங்களில் கிடைக்கும் பழம் தான் நாவல் பழம். இந்த நாவல் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். இந்நிலையில் நாவல் பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. நாவல் பழத்திலுள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இவை நமது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் முக்கிய மினரல்ஸ் ஆகும். இந்த பழத்தை சாப்பிடுவதன் காரணமாக, நம்முடைய ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்தம் அதிக ஆக்சிஜனை உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள இரும்பு சத்து நம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.