ARTICLE AD BOX
/tamil-ie/media/media_files/uploads/2022/09/carrot-juice-4-unsplash-1.jpg)
கேரட் ஜூஸ்: இந்த ஜூஸில் பீட்டா கரோட்டினும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தவும், நிறைவான உணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. கேரட்டின் இயற்கை இனிப்பு ஜூஸை ஆரோக்கியமான பானமாக மாற்றுகிறது. கேரட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறந்த ஆரோக்கியத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் ஆதரிக்கின்றன
/indian-express-tamil/media/media_files/JlehSnrzAsiOZjX4LGxX.jpg)
பாகற்காய் ஜூஸ்: கசப்பான ஜூஸாக இருந்தாலும் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் பண்புகள் மற்றும் குறைந்த கலோரி கொண்டுள்ளதற்காக பாகற்காய் ஜூஸ் ஆரோக்கியமானதாக உள்ளது. இந்த ஜூஸ் பசியை குறைக்க, பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/23/AOHlEUcgND1wWDlgKZc8.jpg)
நெல்லிக்காய் ஜூஸ்: வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால் நெல்லி ஜூஸ் நிரம்பியுள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கும் தன்மையை கொண்டுள்ளது. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் எடை குறைப்பு முயற்சிகளை ஆதரிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/22/zb6L1aTHqFiwg1fjIZrg.jpg)
மாதுளை ஜூஸ்: இந்த ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கஸ் அதிகம் என்பதால் உடலில் ஏற்படும் அழற்சி/வீக்கத்தை குறைக்கும். மாதுளை ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே இது எடை குறைப்பு முயற்சிக்கு கணிசமாக உதவும். மேலும் மாதுளையின் இயற்கை இனிப்பானது கூடுதல் கலோரிகள் இல்லாமல் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை பூர்த்தி செய்கிறது.
/indian-express-tamil/media/media_files/V0Ql5FBJxAMY3XcfwheU.jpg)
வெள்ளரி ஜூஸ்: நம்பமுடியாத அளவிற்கு நீர்சத்து கொண்டது மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டது வெள்ளரி ஜூஸ், எனவே இது எடை குறைப்பு முயற்சிக்கு சிறந்த தேர்வாகும். இந்த ஜூஸ் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அதே போல வெள்ளரி ஒரு நேச்சுரல் டையூரிடிக் ஆகும், இது எடை மேலாண்மைக்கு உதவும்.
/indian-express-tamil/media/media_files/1vJCXlhFAA6ZYW16M7wN.jpg)
தர்பூசணி ஜூஸ்: புத்துணர்ச்சி மற்றும் ஹைட்ரேஷன் அளிப்பதால் இந்த ஜூஸ் எடை இழப்புக்கு சரியான தேர்வாக அமைகிறது. இந்த பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து முழுமையாக உணர உதவும் நிலையில் அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களை இந்த ஜூஸ் வழங்குகிறது. தவிர கலோரி இதில் குறைவாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2nMRkTEOhpdgKtsDAtjo.jpg)
பீட்ரூட் ஜூஸ்: உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்த, ஸ்டாமினாவை அதிகரிக்க இந்த ஜூஸ் பிரபலமாக அறியப்படுகிறது.பீட்ரூட் ஜூஸில் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் கலவைகள் உள்ளன, இவை எடை குறைப்புக்கு உதவும். பீட்ரூட்டின் இயற்கையான இனிப்பு எடையை குறைக்க விரும்புவோருக்கு ஒரு சுவையான விருப்பமாக அமையும்.
/indian-express-tamil/media/media_files/vib8OovIVfDj1nvo46EQ.jpg)
ஆப்பிள் ஜூஸ்: ஃபிரெஷ் ஆப்பிள் ஜூஸில் பெக்டின் (pectin) என்ற நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் கட்டுப்படுத்த மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவும். இதிலிருக்கும் இயற்கையான இனிப்பு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் அதே வேளையில் திருப்திகரமான பானமாக அமைகிறது. சர்க்கரை சேர்க்காமல் ஃபிரெஷ் ஆப்பிள் ஜூஸை குடிப்பது அதன் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கிறது.