கொல்கத்தாவில் மூன்று பெண்கள் மரணம்: தற்கொலையா கொலையா? போலீஸ் விசாரணை

3 days ago
ARTICLE AD BOX
Published on: 
22 Feb 2025, 6:15 am

கொல்கத்தாவில் ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம், நகரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. என்ன நடந்தது பார்க்கலாம்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிரனோய் மற்றும் பிரசுண்டே இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் சுதேஷ்னா மற்றும் ரோமிடே என்ற சகோதரிகளை திருமணம் செய்துக்கொண்டு கொல்கத்தாவில் வசித்து வந்தனர். சகோதரர்கள் இருவரும் அப்பகுதியில் தோல் பதனிடும் தொழிலை நடத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

கோப்பு படம்

சம்பவதினத்தன்று கொல்கத்தா கிழக்கு பெருநகர பைபாஸை அடுத்த அபிஷிக்தா கிராசிங்கிற்கு அருகே அதிகாலை 4 மணியளவில் ஒரு கார் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் காரை சோதனையிட்டபொழுது காரினுள் பிரனோய் மற்றும் பிரசுண்டே மற்றும் ஒரு சிறுவனும் இருப்பது தெரிந்தது. மூவருக்கும் லேசானகாயம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மூவரும் தற்கொலை எண்ணத்துடன் மெட்ரோ தூணில் மோதியதாகவும், அவர்களின் மனைவிகள் வீட்டில் இறந்து கிடப்பதாகவும் கூறவே... அதிர்ந்த போலிசார் உடனடியாக பிரெனோய் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு பிரனோய் மனைவி சுதேஷ்னா அவரின் 14 வயது மகள் மற்றும் பிரசுண்டே மனைவியான ரோமிடே மூவரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் தனித்தனி அறைகளில் இறந்து கிடந்தனர். இதில் 14 வயது சிறுமியின் மார்பு, கால்கள், உதடு மற்றும் தலையில் காயங்களுடன் ஒரு அறையிலும், சுதேஷ்னா,மற்றும் ரோமிடே கழுத்துகள், மணிக்கட்டு அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

குற்றம்
குற்றம்கோப்பு படம்

மூவரின் உடலை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்று தெரியாத நிலையில், போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Entire Article