ARTICLE AD BOX
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த கொடூர செயலை கண்டித்து டாக்டர்களும், அரசியல்வாதிகளும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் தந்தை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சிபிஐ தாக்கல் செய்த சான்றுகளின் அடிப்படையில் நல்லதொரு தீர்ப்பு அமையும் என்று கோட் நினைக்கிறது. அந்த தீர்ப்பை கோட் வழங்கியுள்ளது. எங்களுக்கு சிபிஐ நடத்திய விசாரணையில் நிறைய கேள்விகள் உள்ளது. நாங்கள் இழப்பீடுக்காக கோட்டுக்கு போக மாட்டோம் எங்களுக்கு நீதி வேண்டும் இழப்பீடு வேண்டாம் கொல்கத்தா காவல்துறையினர் தவறு இழைத்துள்ளனர். சிபிஐ இன்னும் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று கூறினார். அவருடைய மகள் உயிரிழப்பை விட அதிக வலியை கொல்கத்தா காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.