"கொன்னு போட்டுருவேன்" கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்!

3 days ago
ARTICLE AD BOX

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு ஜெயில் கைதி ஒருவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருக்கும் கைதிக்கு போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஜெயில் கைதி விடுத்த கொலை மிரட்டல்:

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சருக்கு ஜெயில் கைதி ஒருவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தௌசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவர், முதலமைச்சர் பஜன்லால் சர்மாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

சிறை கைதிக்கு போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை மிரட்டல் விடுத்தவர் ரிங்கு/ரன்வா. போக்சோ வழக்கில் சிறையில் உள்ளார். சிறையில் இருந்துதான் அழைப்பு வந்தது என தெரிய வந்ததை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர்.

நடந்தது என்ன?

இதுகுறித்து ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் பெதம் கூறுகையில், "இந்த விஷயத்தை விசாரிக்கும் பொறுப்பு சிறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விக்ரம் சிங்கிடம் வழங்கப்பட்டது. டௌசா சிறையில், ரிங்கு/ரன்வா என்ற குற்றவாளி, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மொபைல் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பஜன்லால் சர்மாவைக் கொலை செய்வதாக மிரட்டினார்.

போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்தனர். நாங்கள் சிறைச்சாலை டிஜிக்கு உத்தரவு பிறப்பித்தோம். விசாரணை பொறுப்பை சிறைச்சாலை டிஜி விக்ரம் சிங்கிடம் ஒப்படைத்தார். குற்றவாளிக்கு எப்படி போன் கிடைத்தது?

சிறைச்சாலை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு முன்பு சிறை அறைகளில் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தில் சிறைச்சாலையின் மற்றொரு அதிகாரி சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

Read Entire Article